இளம்பெண் தற்கொலை


இளம்பெண் தற்கொலை
x

திருக்கோவிலூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள முதலூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). இவரது மகள் பவித்ரா (வயது 23). இவரை தனது மனைவியின் தம்பியான அதே ஊரைச்சேர்ந்த சேட்டு (25) என்பவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாகராஜ் திருமணம் செய்து வைத்தார். இந்த நிலையில் பவித்ரா சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பவித்ரா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாாின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து பவித்ராவின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story