இளம்பெண் தற்கொலை


இளம்பெண் தற்கொலை
x

சேலம் மாமாங்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

சூரமங்கலம்:-

சேலம் மாமாங்கம் அண்ணாநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31), இவருடைய மனைவி வினோதினி (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. கார்த்திக் சேலத்தில் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையராக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று மாலை வினோதினி தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்த கணவர் மற்றும் குடும்பத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வினோதினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். வினோதினி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருமணமாகி 3 ஆண்டுகள் ஆவதால், வினோதினி சாவுக்கான காரணம் குறித்து உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story