இளம்பெண் தற்கொலை


இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 22 Oct 2022 1:00 AM IST (Updated: 22 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

கொண்டலாம்பட்டி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

கொண்டலாம்பட்டி:-

கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காட்டை சேர்ந்தவர் கோகுல்நாதன். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 26). இவர்களுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. 4 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக ராஜேஸ்வரிக்கும், கோகுலநாதனுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ராஜேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ராஜேஸ்வரிக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் மட்டுமே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story