இளம்பெண் தற்கொலை
ராயக்கோட்டை:-
சூளகிரி தாலுகா ஏ.செட்டிப்பள்ளி அருகே எஸ்.திம்மசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் கமலா (வயது 26). இவருக்கும் கெலமங்கலம் அருகே யு.புரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று முன்தினம் ராமச்சந்திரன் தன்னுடைய மனைவியுடன் சென்று, மகளையும், பேரக்குழந்தைகளையும் பார்த்து வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே வீட்டில் கமலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக ராமச்சந்திரன் போலீசில் புகார் அளித்துள்ளார். அதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் இளம்பெண் இறந்துள்ளதால் உதவி கலெக்டர்் சரண்யா, துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி ஆகியோர் விசாரணை நடத்தினர்.