வாலிபர் தற்கொலை


வாலிபர் தற்கொலை
x

சாத்தூர் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் தாலுகா நத்தத்துப்பட்டியை சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 60). இவரது மகன் கிருஷ்ணன் (40). இவருக்கும், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கிருஷ்ணன் திடீரென விஷத்தை குடித்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஜோதிமணி அளித்த புகாரின் பேரில் இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story