வாலிபர் தற்கொலை
வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
காரியாபட்டி,
நரிக்குடி அருகே உள்ள செங்கமடை கிராமத்தை சேர்ந்தவர் மணிராஜா (வயது 25). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சினேகா என்பவரை திருமணம் செய்தார். மணிராஜாவிற்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மணிராஜா மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி மணிராஜா உயிரிழந்தார். இதுகுறித்து கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story