இளம்பெண் பலாத்காரம்; வாலிபர் கைது
அம்பையில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
அம்பை:
அம்பை அடவியார் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் கிருஷ்ணகுமார் (வயது 30). இவர் அம்பையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே ஜவுளிக்கடையில் அம்பை சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் கிருஷ்ணகுமார் திருமண ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு திருமணத்திற்கு மறுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கிருஷ்ணகுமாரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story