கடை ஊழியரை தாக்கிய வாலிபர் கைது


கடை ஊழியரை தாக்கிய வாலிபர் கைது
x

கடை ஊழியரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை டவுன் சிவா தெருவை சேர்ந்தவர் கோமதிநாயகம். இவரது மகன் ஹரிஹரன் (வயது 20). பேட்டை சேரன்மாதேவி ரோட்டில் அரிசி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது கடையில் பேட்டை வி.வி.கே. தெருவை சேர்ந்த சுடலைமுத்து மகன் பூல்பாண்டி (32) சாமான் வாங்கிக்கொண்டு பாலித்தின் கவர் கேட்டுள்ளார். அதற்கு ஹரிஹரன் கடையில் பாலித்தின் கவர் கிடையாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூல்பாண்டி கடையில் புகுந்து ஹரிஹரனை தாக்கியுள்ளார்‌ இதில் ஹரிஹரன் கையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து பேட்டை போலீஸ் நிலையத்தில் ஹரிஹரன் புகார் அளித்தார். பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பூல் பாண்டியனை கைது செய்தனர்.


Next Story