ஆசிரியையை தரக்குறைவாக பேசி தாக்கிய வாலிபர் கைது


ஆசிரியையை தரக்குறைவாக பேசி தாக்கிய வாலிபர் கைது
x

ஆசிரியையை தரக்குறைவாக பேசி தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

ஆற்காட்டை அடுத்த பூதேரி கிராமத்தை சேர்ந்தவர் தனகோட்டி, தனியார் பள்ளி ஆசிரியை. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு செல்போன் மூலம் அழைப்பு வந்தது. அதில் பேசிய அத்திதாங்கல் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 22) என்பவர் தரக்குறைவாக பேசி உள்ளார்.

இதுகுறித்து ஆசிரியை தனக்கோட்டி தனது மகனுடன் சென்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் தகராறு முற்றி தனகோட்டி மற்றும் அவரது மகன் பகவதியை, ராமகிருஷ்ணன் தாக்கி உள்ளார்.

இதுகுறித்து தனகோட்டி ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story