கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது


கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
x

வேடசந்தூர் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமையிலான போலீசார், நாயக்கனூர் பிரிவு அருகே ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் வாலிபர் ஒருவர் ஓட்டம் பிடித்தார். இதைக்கண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், நாயக்கனூரை சேர்ந்த ராஜதுரை (வயது 23) என்று தெரியவந்தது. மேலும் அவர் வைத்திரந்த பாலித்தின் பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்த 1¼ கிேலா கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜதுரையை கைது செய்தனர்.


Next Story