கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது


கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
x

காட்பாடியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

காட்பாடி

வேலூர் கலால் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் காட்பாடி ரெயில் நிலைய பஸ் நிறுத்தம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் பீகார் மாநிலம் பக்கா மாவட்டத்தை சேர்ந்த குந்தன்குமார் (வயது 24) என்றும பையில் ஒரு கிலோ கஞ்சா இருந்ததும், அதனை அவர் விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story