கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

பந்தலூர் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா எருமாடு அருகே ஓனிமூலாவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தேவாலா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அங்கு நின்று கொண்டு கஞ்சா விற்ற ஓனிமூலா பகுதியை சேர்ந்த அஜீத் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story