வீட்டில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது


வீட்டில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது
x

மூலைக்கரைப்பட்டி அருகே வீட்டில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சேவகன்குளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் உதயகுமார் (வயது 25). டிரைவரான இவர் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பெருமாள்நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். அப்போது அந்த வீட்டில் இருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த மூலைக்கரைப்பட்டி போலீசார், சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை செய்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருச்செந்தூரில் பதுங்கி இருந்த உதயகுமாரை நேற்று கைது செய்தனர்.


Next Story