தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது


தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் திரேஸ்புரம் பகுதியில் சென்ற போது, மாதவநாயர் காலனியை சேர்ந்த தொம்மை என்ற இசக்கிமுத்து (25) மற்றும் 19 வயது வாலிபர் ஒருவர் நின்று கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தார்களாம். அவர்களை பிடிக்க முயன்ற போது இசக்கிமுத்து அங்கிருந்து தப்பி விட்டாராம். 19 வயது வாலிபரை மட்டும் போலீசார் பிடித்தனர். அவரிடம் இருந்து போலீசார் 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மாதவநாயர் காலனியை சேர்ந்த தொம்மு என்பவர் மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இசக்கிமுத்து, மற்றும் வாலிபரிடமும் விற்பனைக்காக கொடுத்து இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் இசக்கிமுத்து, தொம்மு ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.


Next Story