ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது


ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 2 Jan 2023 4:05 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் வேதாரண்யம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரியாப்பட்டினம் சாலை, தூண்டிக்காரன்சுவாமி கோவில் அருகில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், வேதாரண்யம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மணிமாறன் (வயது35) என்பதும், அவர் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.


Next Story