புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டை பகுதியில் போதைப் பொருள் விற்பனை குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஜோலார்பேட்டை ரெயில்வே ஜங்ஷன் புது ஓட்டல் தெருவில் உள்ள பெட்டி கடைகளில் சோதனை செய்தபோது காவேரிப்பட்டு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 36) என்பவர் தனது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதனையெடுத்து கிருஷ்ணமூர்த்தியை போலீசார் கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story