செல்போன் பறித்த வாலிபர் கைது


செல்போன் பறித்த வாலிபர் கைது
x

சிதம்பரத்தில் செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் குறுக்கு தெருவை சேர்ந்தவர் தங்கவேல் மகன் குணசேகரன். இவர் நேற்று முன்தினம் மந்தகரை பஸ் நிறுத்தத்தில், பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர், குணசேகரன் வைத்திருந்த ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து கொண்டு சென்று விட்டார். இது குறித்து குணசேகரன் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதவு செய்து, விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று சிதம்பரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக வந்தவரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர், காரைக்காலில் உள்ள பிரெஞ்சு ஆசிரியர் தெருவை சேர்ந்த சுந்தரம் மகன் வினோத்குமார் (வயது 21), என்பதும், இவர் குணசேகரின் செல்போனை பறித்து சென்ற சம்பவத்தில் தேடப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, வினோத் குமாரை போலீசார் கைது செய்தனர்.


Next Story