செல்போன் திருடிய வாலிபர் கைது


செல்போன் திருடிய வாலிபர் கைது
x

செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் சிவா தெருவை சேர்ந்தவர் சேக் பாதுஷா. இவருடைய மகன் அஜ்மல் ஹைதர் அலி (வயது 19). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை டவுன் இசக்கியம்மன் கோவில் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தாா். அப்போது தனது செல்போனை கரையில் வைத்து இருந்தார். அந்த செல்போனை மர்ம நபர் திருடி சென்று விட்டதாக நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான பெருமாள் மகன் சுடலைகண்ணு (27) என்பவர் செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story