செல்போன் திருடிய வாலிபர் கைது


செல்போன் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருகே செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே மிட்டாதார்குளம் எஸ்தாக்கியார் நகரைச் சேர்ந்தவர் மார்த் கிளாட்வின் (வயது 26). தொழிலாளி. திசையன்விளை பஸ்நிலையத்தில் வைத்து இவரது செல்போனை யாரோ மர்ம நபர் திருடி சென்றுவிட்டதாக திசையன்விளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வீரவநல்லூர் வெள்ளாங்குளி பரமசிவன் மகன் அய்யப்பன் (26) என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து திருட்டு போன செல்போனை போலீசார் மீட்டனர்.


Next Story