ரெயிலில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது


ரெயிலில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
x

அரக்கோணத்தில் ரெயிலில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் கடத்தல் மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் இருந்த போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக தெரிவித்ததால் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர் அரக்கோணம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த ராகுல் (வயது 23) என்பதும், கடந்த 6 மாதத்திற்கு முன்பு ரெயில் பயணி ஒருவரின் செல்போனை திருடிச்சென்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story