செல்போன் கடையில் திருடிய வாலிபர் கைது-மற்றொருவருக்கு வலைவீச்சு


செல்போன் கடையில் திருடிய வாலிபர் கைது-மற்றொருவருக்கு வலைவீச்சு
x

வேலூரில் செல்போன் கடையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

வேலூர்

வேலூரில் செல்போன் கடையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

செல்போன் திருட்டு

வேலூர் சேண்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37). இவர் தோட்டப்பாளையம் காட்பாடி மெயின்ரோட்டில் செல்போன் கடை வைத்துள்ளார். இவரது கடையில் சம்பவத்தன்று இரவு கூரையை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். கடையில் இருந்த 5 செல்போன் மற்றும் செல்போன் சம்பந்தப்பட்ட ரூ.15,000 மதிப்பிலான பொருட்களை திருடி சென்று விட்டனர்.

மறுநாள் மணிகண்டன் கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் இருந்த பொருட்கள் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜந்தா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வாலிபர் கைது

மேலும் தோட்டப்பாளையம் காட்பாடி ரோட்டில் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் செல்போன் கடையில் கொள்ளையடித்து விட்டு சென்றவர்கள் உருவம் பதிவாகி இருந்தது. இதன் மூலம் விசாரணை நடத்தினர்.

அதில் திருட்டில் ஈடுபட்டது வேலூர் மக்கான் அம்பேத்கர் நகரை சேர்ந்த விஜய் (வயது 26) மற்றும் சதீஷ் என்பது தெரியவந்தது. பின்னர் விஜயை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சதீஷை தேடி வருகின்றனர்.


Next Story