மணிபர்ஸ் திருடிய வாலிபர் கைது
ஆற்காட்டில் மணிபர்ஸ் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் உள்ள ஒரு பிரியாணி கடையில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் பிரியாணி வாங்க வந்துள்ளார். அப்போது அந்த கடையில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. அந்த வேளையில் ராஜேஷின் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மணிபர்சை அடையாளம் தெரியாத நபர் எடுத்துக் கொண்டு ஓடி உள்ளார்.
இதனை கண்ட ராஜேஷ் கூச்சலிட்டுள்ளார். உடனே அந்த நபரை பொதுமக்கள் துரத்திச் சென்று பிடித்து ஆற்காடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். போலீஸ் விசாரணையில் பிடிபட்ட நபர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சாய் சிவா (வயது 30) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story