கடையில் தராசை திருடிய வாலிபர் கைது

கடையில் தராசை திருடிய வாலிபர் கைது
மயிலாடுதுறை
சீர்காழி
சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் சீர்காழி பிடாரி வடக்கு வீதியை சேர்ந்த சந்துரு (வயது 55) என்பவர் இனிப்பு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடை வியாபாரத்தை முடித்து இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் ஷட்டரில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது எடை போடும் தராசினை யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சந்துரு சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து கேமராவில் பதிவாகி இருந்த காட்சி மூலம் தராசை திருடிய கடவாசல் மெயின் ரோட்டை சேர்ந்த சிவக்குமார் மகன் முரளி ( 23) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story