வீட்டில் கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது; 1¼ கிலோ பறிமுதல்


வீட்டில் கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது; 1¼ கிலோ பறிமுதல்
x

ஈரோடு புதுமை காலனியில் வீட்டில் 1¼ கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

ஈரோடு புதுமை காலனியில் வீட்டில் 1¼ கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு புதுமை காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக, ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் புதுமை காலனி பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டில் 10 கிராம் எடை உள்ள 164 பாக்கெட்டுகளில் கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மொத்தம் 1¼ கிலோ கஞ்சா இருந்தது.

வாலிபர் கைது

இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்கிற ஷேக் தாவூத் (வயது 28) என்பதும், அவர் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து, விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து சூரம்பட்டி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ஷேக் தாவூத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் யாரிடம் இருந்து இந்த கஞ்சா பாக்கெட்டுகளை வாங்கினார்? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story