கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது


கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 Jan 2023 12:15 AM IST (Updated: 15 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தட்டாப்பாறை விலக்கு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் குலையன்கரிசல் நடுத் தெருவைச் சேர்ந்த பூலோக பாண்டியன் மகன் அன்புராஜா (வயது 31), அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் அன்புராஜை கைது செய்தனர்.


Next Story