மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்க முயன்ற வாலிபர் கைது
பாவூர்சத்திரம் அருகே மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே மயிலப்பபுரம், சின்னகுமார்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகநயினார். இவரது மகன் ஆனந்தசெல்வம் (வயது 24). இவர் பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி அருகில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, மாணவர்களுக்கு மறைத்து வைத்து விற்பனை செய்வதாக பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ஆனந்த செல்வத்தை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூபாய் 84 ஆயிரத்து 740 மதிப்பிலான 11 மூட்டை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story