15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

தஞ்சாவூர் மாவட்டம் ஆவணம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது இப்ராஹிம் (வயது 21). இவர் திருச்சி அரியமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்தார். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள 15 வயது சிறுமியிடம் முகம்மது இப்ராஹிம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முகம்மது இப்ராஹிம்மை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story