மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

காட்டுமன்னார்கோவில் அருகே மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
கடலூர்
காட்டுமன்னார்கோவில்
காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவரை பெற்றோர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதை செய்த டாக்டர்கள் அவர் தற்போது 2 மாத கர்ப்பமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதயடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.
விசாரணையில் மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஈச்சம்பூண்டி கிராமத்தை சேர்ந்த ரூபன்குமார்(வயது 20) என்பது தொியவந்தது. இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் காட்டுமன்னார்கோவில் போலீசாா் கைது செய்தனர்.
Related Tags :
Next Story