வீட்டில் விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சாவுடன் வாலிபர் கைது
வீட்டில் விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சாவுடன் வாலிபர் கைது
கன்னியாகுமரி
நாகர்கோவில்:
ஆற்றூர் கோவில்விளையை சேர்ந்தவர் கிரன் (வயது 26). இவருடைய வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்படி திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவையும், சிறிய எலக்ட்ரானிக் எடை எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் கிரனை கைது செய்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Related Tags :
Next Story