கஞ்சாவுடன் வாலிபர் பிடிபட்டார்


கஞ்சாவுடன் வாலிபர் பிடிபட்டார்
x

பள்ளிக்கூடம் அருகே கஞ்சாவுடன் வாலிபர் பிடிபட்டார்

கன்னியாகுமரி

திருவட்டார்,

திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் ஆற்றூர் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் பள்ளி எதிர்புறம் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பொன்மனை ஈஞ்சக் கோட்டை சேர்ந்த வினோத் (வயது 23) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் வினோத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வினோத் ஏற்கனவே கஞ்சா வியாபாரம் செய்து வந்தவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.


Next Story