விஷம் தின்று வாலிபர் தற்கொலை


விஷம் தின்று வாலிபர் தற்கொலை
x

விஷம் தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி பி.மேட்டூர் அருந்ததியர் தெருவை சேர்ந்த சுப்ரமணியனின் மகன் சத்தியசீலன்(வயது 21). குடும்ப தகராறு காரணமாக இவர் எலிபேஸ்ட்(விஷம்) தின்றதாக தெரிகிறது. இதையடுத்து சத்தியசீலனை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக பி.மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் துறையூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.


Next Story