சீலநாயக்கன்பட்டியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
சீலநாயக்கன்பட்டியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்
அன்னதானப்பட்டி:
சேலம் சீலநாயக்கன்பட்டி ராமையன் காடு பகுதியை சேர்ந்தவர் கங்காதர். இவருடைய மகன் பிரவீன் என்ற ஹரிஹரன் (வயது 22). பெருமாள் கோவில் மேட்டில் உள்ள தனது உறவினரின் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ஹரிஹரனுக்கும், குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஹரிஹரன் விஷத்தை குடித்து விட்டு மயங்கி விட்டார். குடும்பத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story