விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி தாலுகாவில் உள்ள அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ் மகன் வீரக்குமார் (வயது33). இவருக்கு அபிராமி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட வாகன விபத்தின் போது வீரக்குமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவருக்கு அடிக்கடி தலைவலி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவதி அடைந்து வந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story