விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
வாய்மேடு அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
நாகப்பட்டினம்
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த தென்னடார் நடுக்காடு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மகன் அய்யப்பன்(வயது24). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த அய்யப்பன் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அய்யப்பன் இறந்தார். இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story