விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x

நாகர்கோவிலில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் கட்டபொம்மன் சந்திப்பு கீழத்தெருவை சேர்ந்தவர் சபரீஷ் (வயது 29). இவர் கீழபுத்தேரி நெடுங்குளம் பகுதியில் நாய் பண்ணை நடத்தி வந்தார். கடந்த ஒரு ஆண்டாக நாய் பண்ணை தொழில் சரியாக நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த சபரீஷ் கடந்த சில தினங்களாக பண்ணையிலேயே தங்கி இருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று காலையில் நாய் பண்ணையில் பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சபரீஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story