விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட தூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ் கண்ணு. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 26). இவர் 3 முறை வெளிநாடு சென்றும் எந்த வேலையும் கிடைக்காததால் மிகுந்த மன உளைச்சலிலும், தீராத வயிற்று வலியாலும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மணிகண்டன் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story