விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை பெண் தர மறுத்ததால் விரக்தி
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ஜெயபால்(வயது 26). பொக்லைன் எந்திர ஆபரேட்டரான இவருக்கு சிறுவயதிலிருந்து முதுகு வளைந்த நிலையில் உள்ளது.
மாற்றுத்திறனாளியான ஜெயபால் திருமணத்துக்கு பெண் பார்க்க சென்ற போது பெண் வீட்டில் இருந்த சிலர் ஊனத்தை காரணம் காட்டி அவருக்கு பெண் தர மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஜெயபால் சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஜெயபால் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story