விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 3:40 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் விரக்தி அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு தெற்குத்தெருவை சேர்ந்தவர் நாகநாதன் என்பவரின் மகன் மோகன்ராஜ் (வயது 19). இவர் தனது தாயிடம் மோட்டார் சைக்கிள் வாங்கித்தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக தற்போது வாங்கித்தரமுடியாது என்று மறுத்துள்ளார். இதனால் மனம் உடைந்த மோகன்ராஜ் வீட்டில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியிலும் பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு மோகன்ராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது அண்ணன் நவீன்குமார் (21) என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story