காதல் தோல்வியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை


காதல் தோல்வியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
x

குளித்தலை அருகே காதல் தோல்வியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

வாலிபர்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஐநூற்றுமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் தீபக் (வயது 23). பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்து வந்தார்‌. அவர் சொந்த ஊருக்கு வருவதாக தனது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் குளித்தலை வந்த தீபக் குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்று பகுதியில் விஷ மருந்து குடித்துள்ளார். பின்னர் அவரே குளித்தலையில் இருந்து பஸ்சில் ஏறி திருச்சிக்கு சென்றுள்ளார். தனது நண்பர் ஒருவருக்கு தகவல் தெரிவித்து அவர் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

காதல் தோல்வி

இதுதொடர்பாக தீபக்கின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சென்ற தீபக்கின் பெற்றோர் தீபக் எதற்காக விஷ மருந்து குடித்தார் என்று கேட்டபோது, அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், காதல் தோல்வியின் காரணமாக வாழ்வதற்கு பிடிக்காமல் விஷ மருந்து குடித்ததாக தெரிவித்துள்ளார். இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தீபக் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தீபக்கின் தந்தை கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story