கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த குமரநாயக்கன்பேட்டை கிராமத்தை சேர்ந்த வாலிபர் சரத்குமார் (வயது 28). தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்த இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
கடந்த 5-ந் தேதி வீட்டின் அருகே வயல்வெளியில் புல்லுக்கு அடிக்கும் மருந்தை எடுத்து வாலிபர் சரத்குமார் குடித்ததாக கூறப்படுகிறது. இதில் கவலைக்கிடமான நிலையில் அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சரத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story