வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கரூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர் தற்கொலை
கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் அருகே உள்ள ஒரம்புபாளையத்தை சேர்ந்தவர் தேவி. இவரது மகன் தினேஷ் (வயது 22). இவர் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் தேவி வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் கதவை திறந்தபோது, தினேஷ் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தேவி அக்கம், பக்கத்தினர் உதவியுடன் தினேசை மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தினேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வழக்கு
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில், வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிந்து தினேஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.