வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

குடியாத்தத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

குடியாத்தம் அசோக் நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், கூலித் தொழிலாளி. இவரது மகன் சக்திவேல் (வயது 19). சம்பவத்தன்று இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில்தொங்கிய நிலையில் சக்திவேல் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் அவரது தந்தை தமிழ்ச்செல்வன் புகார் அளித்தார். புகாரின்பேரில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சக்திவேல் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story