வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

நொய்யல் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

வாலிபர் மீது தாக்குதல்

கரூர் மாவட்டம், அய்யம்பாளையம் விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 60). இவரது மனைவி விஜயலட்சுமி (54). இந்த தம்பதிக்கு சதீஷ்ராம் (26). என்ற மகன் இருந்தார். இந்தநிலையில், வேலாயுதம்பாளையம் அருகே மலைநகரை சேர்ந்த விவேக், புலியூரை சேர்ந்த தனசேகர், வேலாயுதம்பாளையம் காந்தி நகரை சேர்ந்த பிரகாஷ் மற்றும் சிலர் முன்விரோதம் காரணமாக சதீஷ்ராம் வீட்டிற்கு வந்து அவரது தகாதவார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் பயந்து போன சதீஷ்ராம் வீட்டுக்குள் ஒரு அறைக்குள் சென்று கதவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். வெகுநேரம் கதவை பெற்றோர் தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் மற்றும் அக்கம், பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சதீஷ்ராம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சதீஷ்ராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து சதீஷ்ராமின் தாய் விஜயலட்சுமி வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், சதீஷ்ராமை தாக்கி தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்


Next Story