வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே இடையார் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் சதீஷ் (வயது 18). மெக்கானிக் வேலை பார்த்து வந்தார். இவரும் வெட்டிவயல் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் மகள் மாரியம்மாள் (21) என்பவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இன்று இருவரும் இடையார் கிராமத்தில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சதீஷ் கோபத்தில் மாரியம்மாளை தாக்கி கீழே தள்ளி விட்டு, அவரது துப்பட்டாவை எடுத்து அருகில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து மாரியம்மாள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சதீசை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சதீஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.