வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
பண்ருட்டியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கடலூர்
பண்ருட்டி
பண்ருட்டி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் பழனி(வயது 35). இவருடைய மனைவி சித்ரா(32). சம்பவத்தன்று பழனி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை சித்ரா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பழனி, நேற்று முன்தினம் இரவு பண்ருட்டி கெடிலம் ஆற்றங்கரையில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பழனியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story