வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

கரூர் சின்னஆண்டாங்கோவில் பகுதிக்குட்பட்ட திருப்பதி லேவுட் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 30). கூலி தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி பரமேஸ்வரி என்ற மனைவி உள்ளார். தினேஷிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மது அருந்தி விட்டு வந்த தினேஷ் திடீரென்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பானுமதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தினேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பரமேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து தினேஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story