வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கரூர் அருகே மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அடிக்கடி தகராறு
கரூர் அருகே உள்ள பசுபதிபாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 32). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக தெரிகிறது.
இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்றும் குடித்துவிட்டு பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவரிடம் கோபித்து கொண்டு விஜயலட்சுமி தனது குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
தற்கொலை
இதனால் மனமுடைந்து காணப்பட்ட பாலகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர் பாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.