வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
சிவகாசி
சிவகாசி செங்கமலப்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி மகன் தங்கபாண்டி (வயது 32). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சந்தனமாரி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து அவரது மனைவி சந்தனமாரி கோபத்தில் வீட்டு விட்டு வெளியேறி ராஜபாளையம் அருகில் உள்ள ராமலிங்காபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தங்கபாண்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிவகாசி கிழக்கு போலீசார் தங்கபாண்டி உடலை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பால்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.