வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

கூடலூர் அருகே உள்ள காட்டு மன்னார்குடியை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகன் ஜெயராமன் (வயது 33). இவர் கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் வீடு எடுத்து தங்கி, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஜெயராமனுக்கு திருமணம் செய்வதற்காக வரன் பார்த்து வந்ததாக தெரிகிறது. இதில், அவருக்கு பொருத்தமான மணமகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஜெயராமன் வீட்டில் தூக்கில் தொங்கினார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் ஜெயராமனை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story