நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பி விட்டு வாலிபர் தற்கொலை


நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பி விட்டு வாலிபர் தற்கொலை
x

நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பி விட்டு வாலிபர் தற்கொலை.

வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூரை சேர்ந்தவர் குமாரவேல். இவர் இறைச்சிக்கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது இளைய மகன் நரேந்திரன் (வயது 23). இவர் தந்தைக்கு உதவியாக ஓட்டலை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் நரேந்திரன் நேற்று அதிகாலை திடீரென நண்பர்களுக்கு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் தான் தற்கொலை செய்து கொள்வதாக தகவல் அனுப்பி விட்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் தகவலை பார்த்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நரேந்திரனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story